‛தக் லைப்' : சிம்பு நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு | புஷ்பாவால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை : பஹத் பாசில் ஓபன் டாக் | தொடரும் 'மலையாளி பிரம் இந்தியா' கதை திருட்டு சர்ச்சை | பிறந்தநாளில் பிணமாக படம் வெளியிட்ட அப்புக்குட்டி | எனக்கான பட வாய்ப்புகள் குறையவில்லை : சோனியா அகர்வால் | நடிகை கனகலதா காலமானார் | மே 10ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது 'ஆர்ஆர்ஆர்' | அதர்வா ஜோடியான நிமிஷா சஜயன் | 'ரசவாதி'யில் சித்த வைத்தியர் கேரக்டரை உருவாக்கியது ஏன்? : சாந்தகுமார் பேட்டி | படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவகன், ஸ்ரேயா, ஒலிவியா மோரிஸ் மற்றும் பலர் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் மார்ச் 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இப்படத்தின் பிரிமீயர் காட்சிகள் அமெரிக்காவில் 24ம் தேதியே நடைபெற உள்ளது. அதற்கான முன்பதிவு ஏற்கெனவே ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஒரு புதிய சாதனையையும் படைத்துள்ளது.
பிரிமீயர் காட்சிகளின் வசூலாக முதல் முறையாக ஒரு இந்தியத் திரைப்படம் 8 லட்சம் யுஎஸ் டாலர் தொகை வசூலித்துள்ளது தான் அந்த புதிய சாதனை. அதில் 5 லட்சம் தொகை சினிமார்க் தியேட்டர்கள் மூலம் கிடைத்துள்ளதாம். இதை படத்தை அமெரிக்காவில் வெளியிடும் வினியோக நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரிமீயர் காட்சிகளுக்கான முன்பதிவு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. அதனால், வசூல் தொகை இன்னும் அதிகமாகலாம்.
'ஆர்ஆர்ஆர்' படத்தின் வசூல் 'பாகுபலி 2' வசூலை மிஞ்சும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் இருக்கிறது.