பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு | தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? |

கார்த்திக் நரேன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இயக்கத்தில், தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'மாறன்'. இப்படம் வரும் 11ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இப்படம் பற்றிய எந்த ஒரு பிரமோஷன் நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருகிறார் தனுஷ். இப்படத்திற்காக இதுவரை எந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெறவில்லை. இருப்பினும் சமூக வலைத்தளங்களில் படக்குழுவினர் பலரும் படம் குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால், தனுஷ் மட்டும் தனது சமூக வலைத்தளங்களில் இப்படம் பற்றி எந்த ஒரு பதிவையும் போடவில்லை.
இன்று மாலை இப்படத்திற்காக ஜிவி பிரகாஷ்குமார் இசையில் தனுஷ் எழுதி பாடிய 'சிட்டுக் குருவி' என்ற பாடலின் லிரிக் வீடியோ யு டியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. தான் எழுதி, பாடிய பாடலைக் கூட தனுஷ் ஷேர் செய்யாதது அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் ரசிகர்கள் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் பார்த்தால்தான் அதற்க வரவேற்பு கிடைக்கும். தனுஷே படத்தைக் கண்டு கொள்ளாத போது அவரது ரசிகர்களும் கண்டு கொள்வார்களா ?.