நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா | பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் |
திரைப்பட சங்கங்களில் பெரியதும், முதன்மையானதுமாக இருப்பது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (சேம்பர்). தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழியை சேர்ந்த தயாரிப்பாளர்களை கொண்டு இந்த சங்கம் இயங்குகிறது.
சேம்பரின் பொதுக்குழு கூட இருப்பதாக சேம்பர் நிர்வாகம் அதன் உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பியது. இதை எதிர்த்து கிஷோர் குமார் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் "கடந்த ஜனவரி மாதம் நடந்த தேர்தலில் 4 மாநிலங்களை சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களிக்க போதுமான அவகாசம் வழங்கவில்லை. முறைகேடான தேர்தல் மூலம் தேர்வானவர்கள் பொதுக்குழுவை கூட்ட தடைவிதிக்க வேண்டும்" என்று அவர் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கூட்ட இருந்த 70வது ஆண்டு பொதுக்குழுவுக்கு தடைவிதித்து, சம்பந்தபட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.