லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சந்தானம் நடிப்பில் கடந்த 2016ல் வெளியாகி ஹிட்டான திரைப்படம் 'தில்லுக்கு துட்டு'. இப்படத்தை 'லொள்ளு சபா' ராம்பாலா இயக்கியிருந்தார். மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்தானம் மற்றும் ராம்பாலா கூட்டணியில் 'தில்லுக்கு துட்டு' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாம் பாகத்தை ராம்பாலாவிற்கு பதிலாக ராம்பாலாவின் இணை இயக்குனர் ஆனந்த இந்த படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதேசமயம் நாயகனாக சந்தானமே தொடர உள்ளாராம். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது .