இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

இருட்டு, லாபம் படங்களை அடுத்து தமிழில் யோகிதா என்ற படத்தில் நடித்து வரும் சாய் தன்ஷிகா, தெலுங்கில் ஹரி கொலைகானி இயக்கத்தில் ஷிகாரு என்ற படத்திலும் நடித்து ள்ளார். இப்படத்தில் சாய் தன்ஷிகா கதையின் நாயகியாக நடிக்க, அவருடன் அபிநவ் மெடி செட்டி, தேஜ், அன்னபூர்ணா, சுரேகா வாணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சேகர் சந்திரா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் டிரைலரை இயக்குனர் வி.வி.விநாயக் வெளியிட்டுள்ளார். டிரைலர் தொடங்கி இறுதி வரை நகைச்சுவைக் காட்சிகளாக நிறைந்துள்ளது. சாய் தன்ஷிகா அழகாகவும் சிறப்பாகவும் நடித்திருக்கிறார். முக்கியமாக பாபி என்று கல்லூரி மாணவருடன் சில காரணங்களால் வீட்டில் மாட்டிக்கொ தவிக்கும் பெண்ணாக தன்ஷிகா நடித்துள்ளார். என்றாலும் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி காட்சிகள் நிறைந்ததாக உருவாக்கப்பட்டிருப்பதை டிரைலர் வெளிப்படுத்துகிறது.