2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தெலுங்கில் பிரபாஸ் உடன் சலார் என்ற படத்தில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன், அதையடுத்து பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். மும்பையில் வசித்து வரும் ஸ்ருதி, டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். அவர்களின் காதல் திருமணத்தில் முடியும் என்கிற தகவலும் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் ஸ்ருதிஹாசனுடன் திருமணம் குறித்து சாந்தனுவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் ஒரு பதில் கொடுத்திருக்கிறார். அது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், ஸ்ருதிஹாசன் நடிகை என்பதை தாண்டி தீவிரமான இசைக்கலைஞர். எங்களை இணைத்தது இசைதான். ஒருவரை ஒருவர் நாங்கள் நேசிக்கிறோம். இப்போதுதான் டேட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளோம். அதோடு இசை மற்றும் ஆடைகள் வடிவமைத்தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறோம். இது எங்களது ஆக்கபூர்வமான பயணமாகும். எங்களது படைப்புகள் குறித்து உரையாடி கொள்கிறோம். இது எங்களை ஊக்குவிப்பதோடு அடுத்த கட்டத்தை நோக்கி செல்லவும் உதவி செய்கிறது. இதுதான் தற்போதைக்கு எங்களுக்குள் இருக்கும் உறவு நிலை. திருமணத்தை விட இதில்தான் தீவிரம் காட்டி வருகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.