தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பொது நிகழ்ச்சிகளில் பார்ப்பதே அரிது. அப்படிப்பட்டவர் சினிமாவில் அதிலும் ஒரு முழு பாடலை பாடி நடித்திருக்கிறார் என்றால் அது ஆச்சரியம் தான்.. ஆனால் அவர் அப்படி ஒப்புக்கொண்டது நடிகர் மோகன்லாலின் நட்புக்காக.. ஆம்.. தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள ஆராட்டு என்கிற படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், அவராகவே தோன்றி தான் இசையமைத்த காதலன் படத்தில் ஹிட்டான முக்காலா முக்காபுலா என்கிற முழு பாடலையும் பாடி அசத்தியுள்ளார்.
கதைப்படி மோகன்லால் தனது கிராமத்து மக்களுக்கு உதவி செய்வதற்காகவும் தனது நண்பரான ஏ.ஆர்.ரகுமான் அழைத்தால் வருவார் என்று நிரூபிப்பதற்காகவும் ஒரு மேடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வார். அதில்தான் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு பாடுவது போல காட்சி இடம்பெற்றுள்ளது. தூள் படத்தில் சிங்கம் போல என்கிற பாடலை பரவை முனியம்மா பாட, அதில் விக்ரம் எதிரிகளுடன் மோதும் சண்டைக்காட்சியை படமாக்கி இருப்பார்கள். அதேபோல இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் மேடைக் கச்சேரியில் முக்காலா பாடலை பாடிக்கொண்டிருக்க, மோகன்லால் மேடையின் பின்பக்கம் எதிரிகளை அடித்து துவைத்துக் கொண்டிருப்பதாக இந்த காட்சியை படமாக்கியுள்ளனர். தமிழில் கூட முகம் காட்டாத ஏ.ஆர்.ரகுமான் மலையாள படத்தில் நடித்திருப்பது மலையாள ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.