விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஜோடியாக அறிமுகமாகி டைட்டிலை வென்றவர்கள் செந்தில் கணேஷ் - ராஜலெட்சுமி. தற்போது திரைப்படங்களில் பின்னணி பாடகர்களாக வலம் வருகின்றனர். அதிலும், ராஜலெட்சுமி புஷ்பா படத்தில் பாடிய சாமி சாமி பாடல் உலக அளவில் வைரலாக ஒலித்து வருகிறது. இதற்கிடையில் செந்தில் கணேஷ் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால், அந்த படம் வெற்றி பெறவில்லை. அதேசமயம் கணவன் மனைவி இருவருமே தற்போது சில விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் ஹிட் சீரியல் ஒன்றில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தனர்.
பாடகர்களாக திரையில் அறிமுகமானவர்கள் தற்போது இருவரும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில், போட்டோஷூட்டிலும் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் செந்தில் மற்றும் ராஜலெட்சுமி கல்யாண கோலத்தில் அசத்தலான போட்டோஷூட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளையும் லைக்ஸ்களையும் அள்ளி குவித்து வருகின்றனர். மேலும், போட்டோக்களுக்கு அவர்கள் கொடுத்துள்ள கேப்ஷன்களும் இருவருக்குமிடையேயான காதலை பிரதிபலிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.