சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வரும் காதல் ஜோடி யார் என்பது அனைவருக்குமே தெரியும். இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா தான் அந்த ஜோடி. இருவருக்கும் திருமண நிச்சயம் ஆகிவிட்டது. இருந்தாலும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் காதல் ஜோடிகளாகத்தான் சுற்றி வருகிறார்கள். அவ்வப்போது தன்னுடைய சமூக வலைத்தளங்களில் ஜோடியான புகைப்படங்களைப் பதிவிட்டு பலரையும் பொறாமைப்பட வைப்பது விக்னேஷ் சிவனின் வழக்கம்.
இன்று காதலர் தினம் என்பதால் சும்மா இருப்பாரா…?. அவருக்கு நயன்தாரா பூங்கொத்து கொடுக்கும் வீடியோவைப் பகிர்ந்து, “அவள் உங்களிடம் வந்து பூக்களைக் கொடுக்கும் போது, முதல் முறை போலவே தோன்றும்…இது நிஜமாகவே மகிழ்ச்சியான காதலர் தினம் தான்” என்று பதிவிட்டு அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதன் உடன் காத்துவாக்குல ஒரு காதல் என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இருவரும் நெருக்கமாகக் கட்டிப்பிடித்து தங்கள் காதலைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.