தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் ஜனவரி 23ம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் திடீரென தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவரும் சூழலில் மீண்டும் புதிய தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தேர்தல் அதிகாரி செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. தற்போது விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால் வரும் பிப்.,27ல் தேர்தல் நடைபெறும். காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். அதன்பின்னர் ஓட்டுகள் எண்ணப்படும். இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நடப்பாக இருந்த தேர்தல், கே.கே.நகர், ராஜமன்னார் சாலையில் உள்ள சத்யா மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.