படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி |

பாண்டிராஜ் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், சூர்யா, பிரியங்கா அருள்மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'எதற்கும் துணிந்தவன்'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது.
இப்படத்தைத் தமிழ் மற்றும் தெலுங்கில் மார்ச் 10ம் தேதி வெளியிட உள்ளார்கள். இப்படத்திற்கான தெலுங்கு டப்பிங் தற்போது நடந்து வருகிறது. சூர்யா, தெலுங்கில் சொந்தக் குரலில் டப்பிங் பேசுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
சூர்யாவிற்கு தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க மார்க்கெட் உள்ளது. அவருக்கென அங்கு ரசிகர்களும் உள்ளார்கள். இதுவரையில் அவருடைய தெலுங்கு டப்பிங்கிற்கு வேறு ஒருவர் தான் குரல் கொடுத்து வந்தார். இப்போது முதல் முறையாக சூர்யாவே சொந்தக் குரலில் பேசுகிறார்.
இப்போது முன்னணி நடிகர்களின் படங்கள் பான்--இந்தியா படங்களாகத்தான் வெளியாகி வருகின்றன. 'எதற்கும் துணிந்தவன்' படமும் தமிழ் தவிர, தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பான்--இந்தியா படமாக வெளிவர உள்ளது