ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... |
நடிகை ரேவதி படம் இயக்குவதிலும் சாதனை படைத்தவர். 2002ம் ஆண்டு அவர் இயக்கிய மித்ரு மை பிரண்ட் படம் தேசிய விருது பெற்றது. அதன்பிறகு பிஹிர் மிலேன்ஜ், கேரளா கபே, மும்பை கட்டிங் படங்களை இயக்கினார். தற்போது அவர் இயக்கும் படம் சலாம் வெங்கி. இப்படத்தில் கஜோல் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நேற்று மும்பையில் தொடங்கியது.
இதுகுறித்து கஜோல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியிருப்பதாவது: சொல்லப்பட வேண்டிய ஒரு கதை, தேர்வு செய்யப்படவேண்டிய ஒரு பாதை, கொண்டாடப்பட வேண்டிய ஒரு வாழ்க்கை ஆகியவற்றுக்கான ஒரு பயணத்தை நாங்கள் தொடங்குகிறோம். நம்ப இயலாத இந்த உண்மைக் கதையை உங்களிடம் பகிர்ந்துகொள்ள நாங்கள் மிகவும் ஆவலாக இருக்கிறோம். என்று தெரிவித்துள்ளார்.