மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

சினிமா நட்சத்திரங்கள் பலரும் பலவிதமான சமூக சேவைகளைச் செய்து வருகிறார்கள். நடிகர்கள், நடிகைகளின் பிறந்தநாளில் அவர்களது ரசிகர்கள் ரத்த தானம் செய்வது பல வருடங்களாக நடந்து வருகிறது. அவ்வப்போது நடிகர்களும், நடிகைகளும் அவர்களுடைய ரசிகர்களை தொடர்ந்து சமூக சேவை செய்ய உற்சாகப்படுத்தியும் வருகிறார்கள்.
அந்த விதத்தில் நடிகை ஆண்ட்ரியா ரசிகர்களை ரத்த தானம் செய்ய வேண்டு கோள் விடுத்துள்ளார். இது குறித்து சமூகவலைதளத்தில், “இன்று நல்ல செயல் ஒன்று செய்தேன், அது ரத்த தானம். இது சில காலமாகவே என் மனதில் இருந்தது. அதை செய்தேன். முதலில் உங்களது ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் லெவல் ஆகியவற்றை சோதித்து நீங்கள் ரத்த தானம் செய்யத் தகுதியுள்ளவரா என்று முதலில் பரிசோதிப்பார்கள். பொறுப்பு துறப்பு - 80 சதவீத இளம் பெண்கள் ரத்த தானம் செய்யத் தகுயற்றவர்களாகவே இருக்கிறார்கள். குறைந்த ரத்த அழுத்தம், குறைவான ஹீமோகுளோபின் லெல் ஆகியவையே இதற்குக் காரணம். (இதற்கு முன்பு நான் ரத்த தானம் செய்ய நினைத்த போது இது எனக்கு நடந்தது).
இது என்னை இங்குள்ள அழகான அனைத்து நண்பர்களிடமும் கொண்டு செல்கிறது, நீங்கள் உண்மையான ஹீரோவாக வேண்டுமா ?. ரத்த தானம் செய்து யாரோ ஒருவரது வாழ்க்கையைக் காப்பாற்றுங்கள். டாக்டர்களுக்காக நான் ஒரு பாடலைப் பாடியது போல, யாரெல்லாம் ரத்த தானம் செய்கிறீர்களோ அவர்களுக்காகப் பாடுவேன், நீங்கள் என்னை 'டேக்' செய்யுங்கள்,” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், ரத்த தானம் செய்த புகைப்படங்களையும் பதிவிட்டு, டாக்டர்களுக்காகப் பாடிய வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.