வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான 'மகான்' படத்தில் இடம்பெற்ற 'மிஸ்ஸிங் மீ ..' எனத் தொடங்கும் ராப் பாடலை பாடி, நடிகர் துருவ் விக்ரம் பாடகராக அறிமுகமாகிறார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛மகான்'. தனக்கென சில இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு தனிமனித சுதந்திரத்துடன் லட்சிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் மகான். அவரது குடும்பத்தை விட்டு அவர் வெளியேற வேண்டிய சூழல் உருவாகிறது. கோடீஸ்வரனாக வேண்டும் என்ற தனது கனவு நனவான பிறகு, தன்னுடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள வாரிசு இல்லையே..! என்ற இழப்பை உணர்கிறார். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நல்லதொரு தந்தையாக வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடர்ந்தாரா.. என்பதை பரபரப்பான அதிரடி மிகுந்த படைப்பாக 'மகான்' உருவாகியிருக்கிறது. எதிர்பாராத தொடர் நிகழ்வுகளின் வழியாக நாயகனது வாழ்க்கை எப்படி பயணிக்கிறது என்பதை ஆக்சன் திரில்லருடன் விவரிக்கிறது 'மகான்' படத்தின் திரைக்கதை.
இந்நிலையில் துருவ் விக்ரம் முதன்முதலாக சொந்த குரலில் பாடிய 'மிஸ்ஸிங் மீ ..' எனத் தொடங்கும் ராப் பாடல் வெளியாகிறது. துள்ளலான நடனத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி இருக்கும் 'மிஸ்ஸிங் மீ...' என்ற பாடலை பாடலாசிரியர் விவேக்குடன் இணைந்து நடிகர் துருவ் விக்ரமும் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். தற்போது இந்த பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த படம் ஓடிடி தளத்தில் பிப்., 10ம் தேதி வெளியாகிறது. தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாகிறது.




