பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

2019ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கி நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்தப்படத்தில் அவர் ஒருவர் மட்டுமே படம் முழுக்க நடித்திருந்தார். இப்படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. அதையடுத்து இரவின் நிழல் என்ற படத்தை ஒரே ஷாட்டில் இயக்கி இருக்கிறார் பார்த்திபன். இந்த படத்திற்கு ஏ .ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
இதற்கிடையே தமிழில் தான் இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை ஹிந்தியில் அபிஷேக் பச்சனை வைத்து ரீமேக் செய்திருக்கும் பார்த்திபன், இந்த படத்திற்கு இளையராஜா இசையமைப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 1999ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கி நடித்த ஹவுஸ் புல் படத்திற்கு பிறகு 23 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் பார்த்திபன் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும் அந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கும் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.
அதன் உடன், ‛‛ஹிந்தியின் பின்னணி இசைக்கோர்ப்பில், மறுபுறம் ஏ.ஆர்.ஆர்-ரின் இரவின் நிழல். இசைபட வாழ்தல் அர்த்தப்பட. புகழ் பெற்று பொருள் ஈட்டாமல் இன்னும் பெற உழைப்பின் பெருமை காண்கிறேன். ஆஸ்கார் நாமினேஷன்ஸ் அறிவித்தபோது உச்சரிக்கப்பட்ட பெயர்களின் உச்சபட்ச உற்சாகம் ரூபாய், டாலர், பவுண்ட்டில் அடங்காது'' என்று பதிவிட்டிருக்கிறார் பார்த்திபன்.