10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛விக்ரம்'. அதிரடி ஆக் ஷன் படமாக தயாராகி வரும் இந்த படம் கொரோனா உள்ளிட்ட பிரச்னைகளை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த மாத இறுதியில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது. அதன்பிறகு மற்ற பணிகள் துவங்கி கோடையில் படத்தை வெளியிட எண்ணி உள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசன் போலீஸ் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. லோகேஷின் முந்தைய படங்களை காட்டிலும் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இன்னும் அதிரடியாக, கூடுதலாகவே இருக்கும் என்கிறார்கள்.




