'பாபா' படத்தினால் மாறிய 'பகவதி' பட கிளைமாக்ஸ்! | சூர்யாவின் 50வது படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்? | தனுஷ் தந்த ஐடியாவின் மூலம் இயக்குனர் ஆனேன் : கென் கருணாஸ்! | ராம் சரணின் 'பெத்தி' படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றமா? | 'வாரணாசி' படத்தில் மற்றொரு பாலிவுட் நடிகை! | 'ஸ்பிரிட்' படத்தில் வில்லன் யார் தெரியுமா? | 'ரைட்டர்' பட இயக்குனருடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்! | சிரஞ்சீவியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது! | 'ஜனநாயகன்' படத்தின் ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் வெளியிட்ட தகவல்! | ஷாருக்கான் நடித்து வரும் 'கிங்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது! |

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடித்தவர்களில் மலையாள நடிகை ரெபா மோனிகா ஜான் முக்கியமானவர். அதைத்தொடர்ந்து தற்போது விஷ்ணு விஷால் நடித்துள்ள எப்ஐஆர் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த ஜனவரி 9ல் தனது நீண்டநாள் காதலரான ஜோமோன் ஜோசப் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ரெபா மோனிகா ஜான்.
இந்நிலையில் தங்களது ஹனிமூன் மற்றும் காதலர் தின கொண்டாட்டத்திற்காக மாலத்தீவில் முகாமிட்டுள்ள ரெபா மோனிகா ஜான் தனது கணவருடன் கடற்கரையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், "மாலத்தீவு ஒரு சொர்க்கம்.. போதும் என்று செல்வதற்கு யாருக்குமே மனம் வராது.. குறிப்பாக எங்களுக்கு வராது" என்று கூறியுள்ளார் ரெபா மோனிகா ஜான்.