‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

இந்தியத் திரையுலகில் இந்த ஆண்டின் மிகப் பிரம்மாண்டமான படம் என்ற பெருமையுடன் தயாராகியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் மார்ச் 25ம் தேதி வெளியாக உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால், தமிழ் சினிமா ரசிகர்கள் 'ஆர்ஆர்ஆர்' படத்தை விடவும் அஜித் நடித்துள்ள 'வலிமை' படத்தின் வெளியீடு எப்போது எனத் தெரிந்து கொள்ளத்தான் அதிக ஆர்வத்தில் உள்ளார்கள்.
ஜனவரி 13ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த 'வலிமை' படம் ஒமிக்ரான் தொற்று பரவலால் தள்ளி வைக்கப்பட்டது. இன்று முதல் மாநிலத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுவிட்டன.
தியேட்டர்களில் 50 சதவீத இருக்கை அனுமதி என்பது பிப்ரவரி 15 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு 100 சதவீத இருக்கை அனுமதி கிடைக்கவும் வாய்ப்புள்ளது. அதனால், பல படங்களின் வெளியீடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் 'வலிமை' படத்தின் வெளியீடு பற்றி இன்னும் சில நாட்களில் அறிவிப்பு வரலாம். இருந்தாலும் பிப்ரவரி 24 அன்று இப்படம் வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.




