திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
சிறு வயதில் சின்னச் சின்ன ஆசைகள் என பலருக்கும் பலவித ஆசைகள் இருக்கும். அப்படி ஒரு ஆசை நடிகை ராஷி கண்ணாவுக்கு இருந்திருக்கிறது. ஐஸ் கட்டிகளை தூக்கிப் போட்டு அதில் நனைவது அவருடைய சிறு வயது ஆசையாம். அந்த ஆசையை தற்போது ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
கடந்த சில தினங்களாக மாஸ்கோ புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிக்க வைத்து வருகிறார் ராஷி கண்ணா. “குழந்தைப் பருவ கனவு நனவாகும் தருணம்,” என ஐஸில் விளையாடும் வீடியோவைப் பதிவிட்டுள்ளார். மாஸ்கோவில் தற்போது மைனஸ் டிகிரியில் தட்பவெப்ப நிலை நிலவி வருகிறது. கடந்த மாதம் - 13 வரையும் குளிர் நிலவியுள்ளது.
தமிழில் சூர்யா நடித்த '24' படத்தை இயக்கிய விக்ரம் குமார், தெலுங்கில் இயக்கி வரும் படம் 'தேங்க் யூ'. நாகசைதன்யா, ராஷிகண்ணா மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.