வந்தாச்சு ‛விஜய் 67' அப்டேட் : ரசிகர்கள் குஷி, இந்தவாரம் முழுக்க கொண்டாட்டம் தான் | அதிரடியில் மிரட்டும் நானியின் "தசரா" டீசர் | தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் |
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் கவின். சமீபத்தில் வெளியான 'லிப்ட்' படத்தில் நடித்திருந்தார். அடுத்து அவர் நடித்திருக்கும் வெப் தொடர் ஆகாஷ்வாணி. இதில் ரெபா மோனிகா ஜான் அவரது ஜோடியாக நடித்திருக்கிறார்.ஷரத் ரவி, தீபக் பரமேஷ், வின்சா, அபிதா வெங்கடராமன், மேகி எனும் மார்கரெட், மெல்வின், ஜான்சன் மற்றும் கவிதாலயா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
எனோக் ஏபிள் இத்தொடரை இயக்கியுள்ளார், சாந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். குணா பாலசுப்ரமணியம் இசையமைத்துள்ளார். சோனியா ராம்தாஸ் தயாரித்திருக்கிறார். ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
தொடர் குறித்து இயக்குனர் ஏனோக் ஏபிள் கூறியதாவது: இது ஒரு காதல் ரொமாண்டிக் தொடர். இந்த ஜார்னரில் தமிழில் வரும் முதல் தொடர். இந்த இணைய தொடர் முழுமையான உணர்வுகளை வெளிக்கொணரும், மேலும் தொடரை பார்க்கும் எவருக்கும் இதயத்தை அதிர வைக்கும் உணர்வைத் தரும். கவின் நாம் தினமும் சந்திக்கும் எதிர் வீட்டு அழகான இளைஞனாக நடிக்கிறார், ரெபா மோனிகா ஜான் அவரது காதலியாக நடிக்கிறார். என்றார்.