ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

நாடு முழுவதிலும் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர். என்.ரவி முதன் முறையாக தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதேபோல் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்கள். அதேபோல் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திலும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது ரிசர்வ் மண்டல இயக்குனர் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய போது தமிழ் தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. ஆனால் அப்போது வங்கி ஊழியர்கள் யாரும் எழுந்திருக்காமல் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.
இதுகுறித்து நடிகை கஸ்தூரி கூறுகையில், ‛‛வடக்கத்தி காரர்கள் புதுசாக தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் என்றாலும் ஏதோ தெரியவில்லை என்று நினைக்கலாம். தமிழ் பேசும் இவர்களுக்கு தமிழ் தாயை மதிக்க தோன்றவில்லையா? தமிழகத்தின் அதிகாரப்பூர்வ பண், அதற்கு அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்ற அரசாணையை எதிர்த்து பேசுகிறார்கள். மத்திய அரசு வேலைக்கு எந்த இழப்பும் வராது என்ற இறுமாப்பா? அரசாணையை மீறிய குற்றத்துக்கு தண்டனையோ அபராதமோ விதிக்க வேண்டும்'' என்று தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார் கஸ்தூரி.




