இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி(90). தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 3000க்கும் அதிகமான மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் 2020ல் சந்தானம் நடித்த பிஸ்கோத் படத்தில் பாட்டி வேடத்தில் நடித்தார். இந்நிலையில் திரைத்துறையில் இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.
இதுகுறித்து இவர் கூறுகையில், ‛‛90வது பிறந்தநாளில் இப்படி ஒரு விருது அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை சிறந்த அங்கீகாரமாக கருதுகிறேன். நான் பெற்ற விருதுகளில் பத்மஸ்ரீ விருதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். மத்திய அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார் சவுகார் ஜானகி.