2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

மாஸ்டர் படத்தில் விஜய் வாத்தி, விஜய்சேதுபதி வில்லன். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தில் விஜய்சேதுபதி வாத்தி. அதாவது வாத்தியாராக நடிக்கிறார்.
விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய்சேதுபதியின் தோற்றமும், கேரக்டரும் வெளியிடப்பட்டது. இதில் அவர் வாத்தியாராக இருந்து நக்சலைட் தீவிரவாதியாக மாறும் கேரக்டர் என்று தெரியவருகிறது.
இந்தப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையே திரைப்படமாகிறது. சூரி கதையின் நாயகனாக போலீஸ் கான்ஸ்ட்பிள் வேடத்தில் நடிக்கிறார்.