ஆகஸ்ட் 12ல் லத்தி வெளியீடு | சிவாஜி குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் மற்றொரு நடிகர் | 20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் மகாநதி ஷங்கர் | பத்து தல படத்திற்கு தயாரான சிம்பு | சேரன் இயக்கத்தில் ஆரி, திவ்ய பாரதி நடிக்கும் புதிய வெப்சீரிஸ் | விஜயின் 67வது படம்: உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | விடுதலை படத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு பெரிய கிராமப்புற செட்! | வெளிநாட்டில் பட்டம் பெற்ற சரத்குமார் - ராதிகாவின் மகன் | சிறு பட்ஜெட் படங்களை வெளியிட உதயநிதிக்கு சீனு ராமசாமி கோரிக்கை! | நடிகையாக களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரி! |
தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான படம் 3. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களி ன் படங்களுக்கு இசையமைத்து வந்துள்ள அனிருத் இதுவரை 24 படங்களுக்கு இசையமைத்து விட்டார். இந்த நிலையில் அவரது 25ஆவது படமாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாக உள்ளது.
இந்த 10 ஆண்டுகளில் தான் இசையமைத்த 25 படங்களில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 8 படங்களுக்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அனிருத் இசையமைத்த 25ஆவது படம் காத்துவாக்குல ரெண்டு காதல் என்று தற்போது அப்படத்தை தயாரித்துள்ள ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதோடு 10 ஆண்டுகளில் 25 திரைப்படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத்துக்கு வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்கள். அதோடு இப்படத்தின் அடுத்த சிங்கிள் விரைவில் வெளியாக இருப்பதாகவும் ரவுடி பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.