'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் பாலிவுட் படம் ஒன்றில் மூலம் சினிமாவிற்கு வந்தார். அதன்பிறகு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'பொம்மலாட்டம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள இவர், சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதற்கிடையே கடந்த அக்டோபர் மாதம் ஆண்டு கொரோனா நேரத்தில் தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
காஜல் அகர்வால் தமிழில் 'பாரிஸ் பாரிஸ்' படத்தில் நடித்து முடித்துள்ளார். வெளியீட்டுக்காக இந்தப் படம் காத்துக்கொண்டிருக்கிறது. கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார். இந்த படம் திடீர் விபத்து, கொரோனா, ஷங்கர் லைகா மோதல் உள்ளிட்ட சில பிரச்னைகளால் பாதிக்கப்பட்டது. பிரச்னைகள் அனைத்தும் பேசி முடிக்கப்பட்டது. இந்நிலையில் காஜல் கர்ப்பமாக இருப்பதால் படத்திலிருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியானது. காஜல் தனது கர்ப்பத்தை உறுதி செய்யாமல் இருந்தார். அதேசமயம் அவர் பொதுவெளியில் வந்த சமயங்களில் அவர் கர்ப்பமாக இருப்பதற்கான மாற்றங்கள் அவரது உடலில் தெரிந்தது. காஜல் கர்ப்பமாக இருப்பதை இமோஜி வாயிலாக உறுதிப்படுத்தி இருந்தார் கணவர் கவுதம்.
இந்நிலையில் முதன்முறையாக காஜல் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் "இந்த ஆண்டு எனது குட்டி பாப்பாவைச் சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு மேல் எனக்கு எந்த மகிழ்ச்சியும் கிடையாது. கர்ப்பம் தொடர்பான விரைவான முடிவுகளை எனக்கு எளிதாகத் தருவதால், எனது கர்ப்பப் பயணம் சரியான வழியில் தொடங்கியது என்று நான் நம்பிக்கையுடன் உணர்கிறேன். நான் ஏன் தேர்வு செய்தேன் என்பதை அறிய எனது வீடியோவைப் பாருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
கருத்தரிப்பு பரிசோதனை கருவி விளம்பரத்தின் வழியே தான் கர்ப்பமாக இருப்பதையும் அவர் தெரிவித்துள்ளார். இதிலும் கூட கல்லா கட்டி உள்ளார் காஜல்.