ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த ஜன கன மன | பஹத் பாசில் தயாரிப்பில் நடிக்கும் தங்கல் நடிகர் | ரிட்டர்ன் டிக்கெட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தலைமறைவு நடிகர் | இன்று 85வது பிறந்தநாள் : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ‛ஆச்சி' மனோரமா | சில்க் ஸ்மிதாவுக்கு சமர்ப்பணம் செய்த காஜல் பசுபதி | உன் குறிக்கோள் சரியாக இருந்தால் ஒவ்வொரு அடியும் உனக்கானது : கேப்ரில்லா செல்லஸ் | விதவிதமான புடவைகளில் அழகாக போஸ் கொடுத்த கண்மணி மனோகரன்! | ஆல்யாவை போல போஸ் கொடுத்த அய்லா | உங்களில் யார் அடுத்த ஸ்டார் : ஜீ தமிழ் நடத்தும் மெகா ஆடிசன் | நவாசுதீன் சித்திக்கிற்கு பிரென்சு ரிவேரியா விருது |
எண்பது தொண்ணூறுகளில் புகழ்பெற்ற முன்னணி நட்சத்திரங்களாக விளங்கியவர்கள், வருடத்திற்கு ஒருமுறை ஒன்றாக சந்தித்து தங்களது நினைவுகளை பரிமாறிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதேசமயம் இவர்களில் ஒருவர்கூட தங்களது கல்லூரி கால நண்பர்களை சந்தித்து அளவளாவியது போன்று இதுவரை செய்திகள் எதுவும் வெளியானதில்லை. ஆனால் தற்போது நடிகர் மம்முட்டி சமீபத்தில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் தனது கல்லூரி கால நண்பர்களுடன் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் பி.ஏ., படித்த மம்முட்டி, அப்போது தன்னுடன் படித்த பலரையும் இந்த நிகழ்வில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து வெளியான புகைப்படங்களில், நண்பர்கள் கூட்டத்தில் மம்முட்டி ஒருவரே மிகவும் இளமையாக காட்சி அளிக்கிறார். 70 வயது ஆனாலும் என்றும் மார்க்கண்டேயன் என்கிற பட்டத்துக்கு மம்முட்டி தான் மிகச் சரியான நபர் என்றுதான் இந்த புகைப்படத்தை பார்க்கும்போது தோன்றுகிறது.