குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
ஆங்கில புத்தாண்டு அன்று பல்வேறு தொடர் நிகழ்ச்சிகளை வழங்கி நேயர்களை மகிழ்வித்த பிறகு, ஜீ தமிழ் தனது பொழுதுபோக்கு திருவிழாவை தொடரவுள்ளது. வரும் ஜனவரி 9, மதியம் 3:30 மணிக்கு உலகத் தொலைக்காட்சியில் முதல்முறையாக “தலைவி” திரைப்படத்தை ஒளிபரப்பவுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட தலைவி படத்தை விஜய் இயக்கி இருந்தார். ஜெயலலிதா வேடத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத் நடித்திருந்தார். ஆண்களின் ஆளுமையில் உள்ள உலகத்தில் மனதிடம்மிக்க பெண் ஒருவர், கற்பனையிலும் யாரும் நினைத்து பார்க்க இயலாத பல்வேறு தடைகளைக் கடந்து எப்படி வெற்றி பெற்றார் என்பதைக் காட்டும் இக்கதாபாத்திரத்தினை கங்கனா சிறப்பாக நடித்திருந்தார்.
இவர் தவிர எம்ஜிஆராக அரவிந்த்சாமியும், ஆர்.எம்.வீரப்பன் வேடத்தில் சமுத்திரகனியும், கருணாநிதி வேடத்தில் நாசரும், ஜானகி வேடத்தில் மதுபாலாவும் நடித்திருந்தனர்.
தலைவியின் அசாத்தியமான பயணத்தினை வரும் ஜனவரி 9 அன்று மதியம் 3:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கண்டு மகிழுங்கள்.