'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் தன் காதலரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியை திருமணம் செய்ய இருக்கிறார் என்றும், ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்றும் தகவல் பரவியது. இதனை கடுமையாக மறுத்துள்ள ரகுல் கோபத்துடன் கூறியிருப்பதாவது:
இதுபோன்ற முட்டாளத்தனமான வதந்திகளை நான் பெரிது படுத்துவதில்லை. கண்ணை மூடிக்கொண்டு வேலை செய்ய கற்றுக் கொண்டிருக்கிறேன். தயவு செய்து என்னை தொந்ததரவு செய்யாதீர்கள். நான் இப்போது 10 படங்களில் நடிக்கிறேன் என் முழு கவனமும் என் தொழில் மீது இருக்கிறது.
நான் வெளிப்படைத் தன்மையானவள். ஜாக்கி பாக்னியுடனான என் காதலை பகிரங்கமாக அறிவித்ததை போன்று எனது திருமணத்தையும் அறிவிப்பேன். அந்த துணிச்சல் எனக்கு இருக்கிறது. எதையும், யாரிடமும் மறைக்க வேண்டிய அவசியமில்லை. தயவு செய்து எனது தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். என்று கூறியிருக்கிறார்.