பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடித்த 'புஷ்பா' கடந்த மாதம் 17ம் தேதி வெளிவந்தது. தெலுங்கில் தயாரான இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
அனைத்து மொழிகளிலுமே தியேட்டர்களில் பெரிய வசூலைக் குவித்து 300 கோடியைக் கடந்தது. இப்படம் ஹிந்தி தவிர மற்ற நான்கு மொழிகளில் ஜனவரி 7ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படம் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்று வருவதால் சீக்கிரத்தில் ஓடிடியில் வெளியிட மாட்டார்கள். இன்னும் சில வாரங்கள் கழித்துத்தான் வெளியிடுவார்கள் என்று திரையுலகத்தில் எதிர்பார்த்தார்கள். ஆனால், படம் வெளியான 20 நாட்களில் ஓடிடியில் வெளியாவது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
ஹிந்தி ஓடிடி உரிமையில் சில சிக்கல் உள்ளது. அல்லு அர்ஜுன் நடித்த பல தெலுங்குப் படங்களை ஹிந்தியில் டப் செய்து யு டியூப் தளத்தில் வெளியிட்டு பல கோடி பார்வைகளைப் பெற்ற கோல்ட்மைன்ஸ் நிறுவனம்தான் ஹிந்தி தியேட்டர் உரிமை, யு டியூப் உரிமை ஆகியவற்றைப் பெற்றது. தியேட்டர் வெளியீட்டிலேயே சிக்கல் ஏற்பட்டு பின்னர் அதை தீர்த்து வைத்தார்கள். ஓடிடியில் ஹிந்தியில் எப்போது வெளியாகும், எந்த தளத்தில் வெளியாகும் என்பது விரைவில் தெரிய வரும்.