சந்தானத்தின் ‛லவ் பைட்' | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகும் துல்கர் படம் | பிளாஷ்பேக் : போலீஸாக சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக் : ஒற்றைக்காலில் நடித்தே உயிர் விட்டவர் | பாடல் சர்ச்சை : மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்ட நோரா பதேகி | சல்மான்கான் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதானா ? | கொல்லப்பட்ட விலங்கு நல ஆர்வலர் : கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பார்வதி | திரிஷ்யம் 3 படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது | மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : விஜய்க்கு ஆதரவாக திரையுலகினர் குரல் | 50வது நாளில் 'யூத்' |

அனுராக கரிக்கின் வெல்லம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானர் ரஜிதா விஜயன். அதன்பிறகு பல படங்களில் நடித்தார். தமிழில் கர்ணன், ஜெய் பீம் படங்களில் நடித்துள்ளார். தற்போது சர்தார் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து வருகிறார்.
ரஜிதா நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான மலையாளப் படம் ஜூன். ஜோஜு ஜார்ஜ் ரஜிஷா விஜயனின் தந்தையாக நடித்துள்ளார். இவர்கள் தவிர சர்ஜினோ காலித், அர்ஜுன் அசோகன், சன்னி வேயோன், அஜு வர்க்கீஸ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். அகமத் கபீர் இயக்கி இருந்தார். பள்ளி மாணவர்களின் உளவியல் ரீதியான பிரச்சினைகளை பேசும் படம்.
இந்த படம் தற்போது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. தமிழ் பாடல்கள் மற்றும் வசனங்களை நவீன் முத்துசாமி எழுதியுள்ளார். ஆன்ட் அண்ட் எலிபன்ட்ஸ் சினிமாஸ் சார்பில் அனில் கே.ரெட்டி மற்றும் வி.ஜெயபிரகாஷ் ஆகியோர் வெளியிடுகிறார்கள்.