'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
வரும் ஜன-7ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக மும்பை மற்றும் தென்னிந்தியா முழுவதும் சுற்றி வருகின்றனர் படக்குழுவினர்.. அப்படி செல்லும் இடங்களில் அந்தந்த திரையுலகில் உள்ள முக்கிய ஹீரோக்களை புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கின்றனர். அந்தவகையில் பாலிவுட்டில் சல்மான்கான், கோலிவுட்டில் சிவகார்த்திகேயன் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தினர்.. சிவகார்த்திகேயனை பொறுத்தவரை இது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றே சொல்லவேண்டும்.
அந்தவகையில் கேரளாவில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் இளம் முன்னணி நடிகரான டொவினோ தாமஸை சிறப்பு விருந்தினராக அழைத்து மேடையேற்றியது ஆர்ஆர்ஆர் டீம்.. மேலும் சமீபத்தில் டொவினோ நடிப்பில் வெளியான மின்னல் முரளி படத்தையும் ராஜமவுலி உள்ளிட்ட அனைவரும் புகழ்ந்து பேசியுள்ளனர்.
இதில் ஜூனியர் என்.டி.ஆர் ஒரு படி மேலே போய், “மோகன்லால், மம்முட்டி, துல்கர், பஹத் பாசில் போன்ற நடிகர்களை போலவே நீங்களும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு நடிகர் தான். உங்களுடைய மின்னல் முரளிக்கு என் வாழ்த்துக்கள்.. நாம் விரைவில் மீண்டும் சந்திப்போம் பிரதர்” என்று டொவினோவை பாராட்டியுள்ளார். வளர்ந்துவரும் நிலையில் உள்ள டொவினோ தாமஸுக்கும் இந்தியாவே வியந்து பார்க்கும் ஆர்ஆர்ஆர் படக்குழுவின் இந்த பாராட்டுக்கள் மிகப்பெரிய கவுரவம் என்றே சொல்ல வேண்டும்.