தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சி : பாலிவுட் அதிர்ச்சி | மேடையில் கண்கலங்கிய ஐஸ்வர்ய லட்சுமி | ஆண்ட்ரியாவுக்கு முதன்முறை | சீரியலில் மாஸான என்ட்ரி : வனிதாவின் புது ட்ராக் | அழகு நாயகிகளின் ரீ-யூனியன் | சிகரெட் பிடிக்கும் ‛‛சிவன்'', ‛‛பார்வதி'': லீனாவின் அடுத்த ‛‛குசும்பு'' | குந்தவையாக த்ரிஷா : வெள்ளியன்று பொன்னியின் செல்வன் டீசர் ரிலீஸ் | நரேன் வேடத்தை பெண்ணாக மாற்றிய அஜய் தேவ்கன் | காமெடி நடிகரிடம் மன்னிப்பு கேட்ட அடார் லவ் இயக்குனர் | ஐந்து நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட யானை |
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படம் ஆர்ஆர்ஆர். இந்த படம் ஜனவரி 7ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் மட்டுமின்றி தமிழ் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், ‛‛ராஜமவுலியின் மகதீரா படம் வெளியான போது தனக்கு சத்யம் திரையரங்கு மிகவும் பிடிக்கும். அதிலுள்ள பெரிய திரையரங்கில் தன்னுடைய படம் வெளியாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது அது நடைபெற்றது. அதேபோல் இப்போது ஆர்ஆர்ஆர் படத்தை தமிழகத்தில் உள்ள மூன்று ஏரியாக்களை வாங்கியிருக்கும் ரெட் ஜெயன்ட் நிறுவனம், சத்யம் திரையரங்கில் உள்ள 6 ஸ்கிரீன்களில் 5 ஸ்கிரீன்களில் படத்தை வெளியிடுவோம் என உறுதி அளிக்கிறேன் என்று தெரிவித்தார்.