பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
மாறா, சக்கரா படங்களுக்கு பிறகு ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் படம் கலியுகம். தமிழ், தெலுங்கில் தயாராகிறது. பிரைம் சினிமாஸ் நிறுவனத்தின் ஆர்.கே. இன்டர்நேஷனல் இன்கார்பரேட் சார்பில் ராமகிருஷ்ணன் தயாரிக்கிறார். ப்ரமோத் சுந்தர் இயக்கி வருகிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத்துடன் கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கே.ராம்சரண் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது. தற்போது கலை நயத்துடன் உருவாக்கப்பட்ட அதிநவீன அரங்கத்தில் தொடங்கியிருக்கிறது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ப்ரமோத் சுந்தர் கூறியதாவது : போஸ்ட் அபோகாலிப்டிக் எனப்படும் இறுதி பேரழிவிற்கு பின்னரான திரில்லர் ஜானரில் தயாராகி வரும் படம். திறமையான இளைய தலைமுறை கலைஞர்களால் உருவாக்கப்பட்டு வருகிறது. ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் தயாராகி வருவதாலும், தயாரிப்பில் இருக்கும்போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. என்றார்.