நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் | பிளாஷ்பேக் : 3 இயக்குனர்கள் இயக்கிய புராண படம் | பிளாஷ்பேக் : ஹீரோயின் ஆக நடித்த டி.ஏ.மதுரம் | கோவா திரைப்பட விழாவில் தமிழ் குறும்படம் | 110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை | முதல்வர் குடும்ப திருமணத்தில் தனுஷ், நயன்தாரா : முகத்தை திருப்பிக் கொண்டு வெறுப்பை காட்டினர் |
தீரன் இயக்கத்தில் சத்யராஜ், ஸ்ம்ருதி வெங்கட், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தீர்ப்புகள் விற்கப்படும். சட்டத்தை மையமாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவாகியிருக்கிறது. சஜீவ் மீரா சாகிப் ராவுத்தர் என்பவர் தனது ஹனிபீ கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார் . இந்தப் படம் தொடங்கப்பட்டபோது இன்பினிடி பிரின்ஸ் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனமும் இணை தயாரிப்பாளராக பைனான்ஸ் உதவி செய்திருக்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் அந்த நிறுவனத்தை ஓரங்கட்டிவிட்டு தனது நிறுவனத்தின் பெயர் மற்றும் படம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார் சஜீவ் மீரா சாகிப் ராவுத்தர்.
அதையடுத்து இரண்டு நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. இதன் காரணமாக ஆலப்புழாவில் உள்ள நீதி மன்றத்தில் தீர்ப்புகள் விற்கப்படும் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று இன்பினிடி பிரின்ஸ் புரொடக்ஷன்ஸ் சுதாகரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதன் காரணமாக இந்த படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் நேற்று டிசம்பர் 24ம் தேதி திரைக்கு வர இருந்த படம் வெளிவரவில்லை.