‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
சமீபகாலமாக நடிகைகள் உடல் பருமன் காரணமாக கேலி, கிண்டல்களுக்கு ஆளாவதும் அதற்கு பதில் தருவதும் வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக சமீரா ரெட்டி போன்றோர் தாங்கள் குழந்தை பிறப்புக்கு பின் குண்டானதையும் அப்போது வந்து கேலிகள் பற்றியும் பேசி வருகின்றனர். அந்த வரிசையில் சாயிஷாவும் ஒரு பதிவிட்டுள்ளார். ஆனால் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்ட சாயிஷா குழந்தை பிறந்த பிறகும் அதே உடலமைப்புடன் இருக்கிறார். அடிக்கடி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை, தனது சமூகவலைதளபக்கத்தில் பதிவிட்டு வருகிறார். குழந்தை பிறப்புக்கு பிறகு தான் உடல் எடை குறைத்த ரகசியத்தையும், அதை பற்றிய சில குறிப்புகளையும் கூறியுள்ளார்.
நாம் எவ்வளவு தொடர்ச்சியாக மற்றும் தீவிரமாக பயிற்சி செய்கிறோமோ அப்போது தான் இது சாத்தியமாகும். மேலும் முடியாத காரியங்களில் ஈடுபடுவது ரொம்ப கடினம். ஆகையால் முடியவில்லை என்றால் அதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அதுவே உங்களுக்கு பிரச்சனையை உண்டாக்கும்.
எல்லாப் பெண்களும் அவரவர் பார்வையில் அழகுதான். அதில் நாம் ஒல்லியான உடல் அமைப்பில் இருக்கும் போது அதன் பயன் என்னவென்றால் அது தேவையில்லாத கொழுப்பை குறைத்து விடும். நம்முடைய குறிக்கோள் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமே. மேலும் இவை அனைத்திற்கும் நிச்சயமாக ஒரு நேரம் காலம் கண்டிப்பாக தேவைப்படும். மற்றவரைப் பார்த்து அவர்கள் மாதிரி ஆக வேண்டும் என நினைக்காதீர்கள். உங்களுடைய உடல் வேறு, உங்களுடைய ஆரோக்கியம் வேறு. அதனால் அதற்கு தகுந்தாற் போல் அமைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்த புகைப்படத்தை நான் பதிவிட காரணம், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதே எனது ஸ்டைல், இது தான் எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது எனவும் கூறியுள்ளார்.