''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
2021ம் ஆண்டின் கடைசி இரண்டு வாரங்களே பாக்கி உள்ளன. இன்று டிசம்பர் 23ம் தேதி 'ராக்கி' திரைப்படமும், டிசம்பர் 24ம் தேதி 'ரைட்டர், ஆனந்தம் விளையாடும் வீடு, தள்ளிப் போகாதே, துனேரி' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களாக 'ரைட்டர், ராக்கி' ஆகிய இரண்டு படங்கள்தான் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
'தள்ளிப் போகாதே, ஆனந்தம் விளையாடும் வீடு' ஆகிய இரண்டு படங்களும் வெளியாவது சமூக வலைத்தளங்களில் கூட அதிகம் பகிரப்படவில்லை. 'துனேரி' படம் சிறிய பட்ஜெட் படம், நடிகர்களும் புதுசு.
'ரைட்டர்' படத்தை பா.ரஞ்சித் தயாரிப்பதும், சமுத்திரக்கனி நடித்திருப்பதும், இந்தப் படத்தின் டிரைலர் ஏற்கெனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதும் ரசிகர்களிடம் தெரிந்துள்ளது. இப்படத்தைப் பார்த்த சினிமா பிரபலங்களும் பாராட்டியுள்ளார்கள்.
'ராக்கி' படத்தை விக்னேஷ் சிவன், நயன்தாரா வெளியிடுவதால் இப்படம் பற்றியும் ரசிகர்களுக்கத் தெரிந்திருக்கிறது. இப்படத்தின் டிரைலரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமர்சன ரீதியாக 'ரைட்டர், ராக்கி' படங்கள் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதை மீறி குடும்பக் கதையான 'ஆனந்தம் விளையாடும் வீடு', காதல் கதையான 'தள்ளிப் போகாதே' படங்கள் வரவேற்பைப் பெறுமா என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.