அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் | விஜய் சேதுபதி நடித்த ஸ்லம்டாக் தமிழ் படமா? டப்பிங்கா? | காக்டெயில் 2 படத்தில் நடிக்க பயந்தேன் : ராஷ்மிகா மந்தனா | 10 வருடத்திற்கு பிறகு ‛பரிமளா அண்ட் கோ'வில் மீண்டும் கதகளி ஆடிய பாண்டிராஜ் | ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி | கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி |

வினோத் - அஜித் கூட்டணியில் உருவாகி உள்ள இரண்டாவது படம் ‛வலிமை'. காலா பட நடிகை ஹூயுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கொரோனா பிரச்னையால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக உருவாகி வந்த இந்த படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. அதிரடி ஆக் ஷன் படமாக வலிமை உருவாகி உள்ளது. குறிப்பாக படத்தில் இடம் பெறும் பைக் சேஸிங் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. அதோடு ஏற்கனவே இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள், முன்னோட்ட வீடியோ ஆகியவையும் வெளியாகி ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்தன.
இந்நிலையில் இன்று(டிச., 22) வலிமை படத்தின் விசில் தீம் மியூசிக் வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக அஜித் - யுவன் கூட்டணியில் உருவாகும் படங்களின் தீம் மியூசிக் வேற லெவலில் இருக்கும். உதாரணமாக இவர்களின் முந்தைய படங்களான பில்லா, பில்லா 2, மங்காத்தா, ஆரம்பம் போன்ற படங்களை கூறலாம். ஆனால் இன்று வெளியாகி உள்ள வலிமை விசில் தீம்மில் அது சற்றே மிஸ்ஸிங் என எண்ண வைக்கிறது. இருந்தாலும் ரசிகர்களை இதனை கொண்டாடி வருகின்றன. வெளியான 10 நிமிடத்தில் யு-டியூப்பில் 1.7 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளும், 72 ஆயிரம் லைக்குகளும் கிடைத்தன.