பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் | நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்! | 'கருப்பு' படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல் | கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை | மேடையில் 'கெட்ட வார்த்தை' பேசி பின் சமாளித்த ராஷ்மிகா | முதல்வர் விஜய்க்கு தனித்தனியே கோரிக்கை வைத்த கமல்ஹாசன், விஷால் | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? | சூரியிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட நடிகர் கொட்டாச்சி | சினிமாவில் நடிக்க மறுக்கும் ரவி மோகன்: எந்தெந்த படங்களுக்கு பாதிப்பு? | சில பல படங்களின் காப்பியா 'கருப்பு'? |

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் 2022 ஜனவரி 7ம் தேதி தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்திய சினிமா உலகில் இதுவரை வேறு எந்தப் படமும் வெளியாகாத அளவிற்கு அதிகமான தியேட்டர்களில் இப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது.
இப்படத்தை அமெரிக்காவில் மிகப் பெரும் அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அங்கு ஐந்து மொழிகளிலும் சேர்த்து 2000க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிடப் போகிறார்கள்.
தெலுங்கில் 1000 தியேட்டர்கள், ஹிந்தியில் 800, தமிழில் 300, கன்னடம், மலையாளத்தில் தலா 60 தியேட்டர்கள் என ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். ஒரு இந்தியத் திரைப்படம் அமெரிக்காவில் இவ்வளவு தியேட்டர்களில் வெளியாவது இதுவே முதல் முறை.
'ஆர்ஆர்ஆர்' படம் வசூலில் மிகப் பெரும் சாதனை புரிந்து 'பாகுபலி 2' வசூல் சாதனையை முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.