அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் |

நடிகர் அர்ஜூன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழ்பவர் அர்ஜூன்(57). ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சர்வைவர் நிகழ்ச்சியில் அர்ஜூன் பங்கேற்று தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். சான்சிபார் தீவில் நடந்த இந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று நிறைவடைந்தது. நிகழ்ச்சியை முடித்து திரும்பிய அர்ஜூனுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுப்பற்றி அர்ஜூன் கூறுகையில், ‛‛கொரோனா பரிசோதனையில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என் வீட்டில் என்னை தனிமைப்படுத்தி உரிய நெறிமுறைகளுடன் சிகிச்சை எடுத்து வருகிறேன். என்னுடன்தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். நான் நலமாக உள்ளேன். தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'' என தெரிவித்துள்ளார்.