வாழ்க்கை இத்துடன் முடியவில்லை : இளைஞர்களுக்கு சமந்தா அட்வைஸ் | கணவருடன் பிரிவா? - புகைப்படம் வெளியிட்டு பதிலடி கொடுத்த நவ்யா நாயர் | நாகார்ஜுனா பட வாய்ப்புகளை தொடர்ந்து தவிர்க்கும் ராஷ்மிகா | விஷ்ணு மஞ்சு படத்திலிருந்து வெளியேறிய நூபுர் சனோன் | விடுதலை 2ம் பாகத்தில் இணைந்த தினேஷ், மஞ்சு வாரியர் | துருவ நட்சத்திரம் படத்தின் முக்கிய அப்டேட் | மீண்டும் இணையும் ‛மெட்ராஸ்' பட கூட்டணி | பணத்திற்காக கேவலமான நோக்கத்தோடு பரப்புகின்றனர் : சாய்பல்லவி காட்டம் | ரஜினி 170வது படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் இதோ | இறைவன் படத்திற்கு ‛ஏ' சான்றிதழ் |
சென்னை : 'தியேட்டரில் ரகளை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஆன்டி இண்டியன் பட இயக்குனர், போலீசில் புகார் அளித்து உள்ளார்.
சென்னை, திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் இளமாறன், 53. சமூக வலைதளமான, 'யு டியூப்'பில், திரைப்படங்களை விமர்சனம் செய்வார். இதனால், 'புளு சட்டை' மாறன் என அழைக்கப்பட்டு வருகிறார். இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்:'மூன் பிக்சர்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஆதம்பாவா என்பவரின் தயாரிப்பில், ஆன்டி இண்டியன் என்ற படத்தை இயக்கி உள்ளேன்.
படம் வெளியாகி 240 தியேட்டர்களில் ஓடுகிறது. முறையாக தணிக்கை செய்து, படத்தை வெளியிட்டுள்ளோம். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில், ஆன்டி இண்டியன் படத்தை திரையிடக் கூடாது' என, 10க்கும் மேற்பட்ட நபர்கள் நேற்று முன்தினம் இரவு தகராறு செய்துள்ளனர். தங்களை தேசிய கட்சி பிரதிநிதிகள் என்றும் கூறியுள்ளனர்.
மலிவான விளம்பரம், சுய அரசியல் லாபத்திற்காக ரகளை செய்து, எங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் செயல்படும் நபர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.