ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள படம் புஷ்பா. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு சமந்தா நடனம் ஆடி இருக்கிறார். இந்த புஷ்பா படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஸ்ரீவள்ளி, சாமி போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் சமந்தா நடனமாடிய பாடல் கடந்த வாரத்தில் வெளியானது. யூடியூபில் இதுவரை அந்த பாடல் 21 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஒரு மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது.
தமிழ் பதிப்பில் இந்த பாடலை விவேகா எழுத ஆண்ட்ரியா பாடியிருக்கிறார். இந்த நிலையில் இந்தப் பாடலுக்கு தற்போது ஆந்திராவில் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. காரணம் இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், ஆண்கள் காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து எழுதப்பட்டதாக கூறி அதனை தடை செய்ய வேண்டும் என ஆந்திர நீதிமன்றத்தில் ஆண்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.




