அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் வானத்தை போல. ஆரம்பத்தில் சற்று சறுக்கிய இந்த தொடர் அண்ணன் தங்கை பாசமலர் பார்முலாவில் சமீப காலங்களில் தூள் கிளப்பி வந்தது. இந்த சீரியலின் கதாநாயகியாக தங்கச்சி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஸ்வேதா கெல்கே. தமிழ் சின்னத்திரையில் வானத்தைப் போல சீரியலில் நடித்த பிறகு ஸ்வேதாவுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது . சீரியலும் டாப் கியரில் சென்று கொண்டிருக்க, திடீரென ஸ்வேதா சீரியலை விட்டு விலகியதாக தகவல்கள் வெளியானது.
இதனை தொடர்ந்து சில மணி நேரத்திலேயே ஸ்வேதா, 'நான் சீரியலை விட்டு விலகுவது உண்மை தான். நேற்று முன்தினம் (சனிக்கிழமை, டிசம்பர் 11) நான் துளசியாக நடிப்பது முடிவுக்கு வருகிறது' என்று தெரிவித்துள்ளார்.
ஸ்வேதாவுக்கு பதிலாக இனி துளசியாக ஜெமினி டிவியின் பிரபல சீரியல் நடிகையான 'மான்யா' நடிக்கவுள்ளதாக தெரிய வருகிறது.