சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

நம்மூரு இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் 'பேச்சுலர்'. 'லிவிங் டு கெதர்' உறவு முறையை மையமாகக் கொண்டு, ஜாலி, சீரியஸ்னஸ் கலவையில் அசத்தலான படமாக வெளிவந்திருக்கிறது. இளம் தலைமுறைக்கு பிடித்துப்போக, தியேட்டர்களில் ஒரு வாரத்துக்குப் பிறகும், வார நாட்களின் காலைக்காட்சியிலும், 90 சதவீத இருக்கைகள் நிரம்புகின்றன. தயாரிப்பாளர், இயக்குனர், நாயகி, நடிகர்கள் என படக்குழுவினர், கோவை ப்ரூக் பீல்டு மாலில், திரையரங்க ரசிகர்களைச் சந்திக்க நேரில் வந்திருந்தனர். அவர்களிடம் பேசியதிலிருந்து...
இயக்குனர் சதீஷ்: கிணத்துக்கடவுதான் நம்மூரு. இது, முதல் கதையல்ல. இந்தக் கதை தயாரிப்பாளருக்கு பிடிச்சது. நான் கோவைங்கறதால, ஹீரோ கோவையைச் சேர்ந்தவர்னு எழுதல. சும்மா அமைஞ்சது. 'லிவிங் டு கெதர்' ரிலேசன்ஷிப் பத்தி, இன்றைய தலைமுறைக்கு புரிதல் இருக்கு. சிட்டி ஏரியால படம் ரொம்ப நல்லா போகுது. புறநகர்லயும் வரவேற்பு இருக்கு. இந்த மாதிரி கதை களத்தை எடுக்க, சில தயாரிப்பாளர்கள் யோசிப்பாங்க. நம்ம தயாரிப்பாளர் உடனே 'ஓகே' சொன்னார். நம்பிக்கை வச்ச அவருக்கு நன்றி சொல்லணும். தெலுங்கில், 'பாலி' படத்தில் அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி. தமிழில் 'பேச்சுலர்' முதல் படம்.
டில்லி பாபு: எங்க தயாரிப்புல இதுவரைக்கும் நல்ல படங்களையே குடுத்துருக்கோம். இந்தப்படமும் நல்லா போகுது. பரத் நடிப்பில் ஒரு படம், ஜி.வி.பிரகாஷ், பாரதிராஜா, தீனா நடிப்பில் இன்னொரு படம் ரெண்டும் முடிஞ்சிருக்கு. அடுத்தடுத்து திரைக்கு வரும். அதே மாதிரி, லாஸ்லியா, ஷிவானி, புதுமுகம் நடிப்பில் அடுத்த படம் பண்ணிட்டுருக்கோம். சாண்டி மாஸ்டரும் இந்தப் படத்துல இணைவார்.யூடியூப்களில், கொங்குத் தமிழில் கலக்கும் தனம், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கிறார்.
தனம்: இந்தப்படம் பெண்களுக்கு பிடிக்கும்னு நம்பறேன். இன்றைய சூழல்ல எப்படி வாழறாங்க. என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்றாங்கறத காட்டிருக்காங்க. ஒரு நல்ல படத்துல நடிச்ச திருப்தி இருக்கு.
கோவை நவக்கரையைச் சேர்ந்த நவீன், இரு பாடல்கள் எழுதி, பாடியிருக்கிறார். ஒயில் கும்மிப் பாடல்களை திரையில் கொண்டு வந்திருக்கிறார். அவரிடம் பேசுகையில், ''நம்ம ஊர் பெண்களின் காதலையும், வீரத்தையும் பிரதிபலிக்கிற மாதிரியான பாடல்களை எழுதி, பாடியிருக்கேன். இயக்குனருக்கு இம்மண்ணின் செழுமை வாய்ந்த இலக்கியத்து மேல இருந்த தேடலே இதுக்கு காரணம்,'' என்றவர், 'கவண் எறிந்து ஆலஞ் சொல்லும்' என்ற பாடலைப் பாடியபடி, படக்குழுவினருடன், தியேட்டருக்குள் நுழைய, பார்வையாளர்களின் ஆரவாரத்தால், அப்பகுதியே அதிர்ந்தது.




