தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பாகுபலி படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கியுள்ள, ஆர்ஆர்ஆர் என அழைக்கப்படும், ரத்தம் ரணம் ரவுத்திரம் படம், ஜனவரி 7ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியாபட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படக்குழுவினர் நேற்று முன்தினம், தமிழ் பதிப்பின் முன்னோட்டத்தை சென்னையில் வெளியிட்டு, பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள் அளித்த பேட்டி:
நடிகை ஆலியா பட்: என் திரை பயணத்தை இங்கு தான் ஆரம்பித்தேன்; மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி. ஒரு இயக்குனர் தான், நான் நடிப்பதை முடிவு செய்ய வேண்டும். இயக்குனரின் பார்வை முக்கியம். நான் தொடர்ந்து தென்னிந்திய படங்களில் நடிக்க விரும்புகிறேன். இப்படத்தில் நடித்தது, இனிமையான அனுபவமாக இருந்தது.
ராம்சரண்: ராஜமவுலியுடன் வேலை செய்வது சவாலானது. நான் பிறந்தது சென்னை; தமிழ் என் இரண்டாவது தாய்மொழி. தமிழில் பேசியது சிறந்த அனுபவமாக இருந்தது.
ஜூனியர் என்.டி.ஆர்.,: ராஜமவுலி என் மீது அதிக நம்பிக்கை வைத்தார். அதுவே எனக்கு பயத்தையும் தந்தது. தென்னிந்திய சினிமா பிறந்ததே சென்னையில் தான். தமிழுக்கும், சினிமாவுக்குமான தொடர்பை மறுக்க முடியாது.
ராஜமவுலி: சென்னை தான் எனக்கு சினிமா கற்றுத்தந்தது. படம் எடுக்கும் போதே, பெரிய படம் என்று சொல்ல முடியாது. ரசிகர்கள் தான் படத்தை பெரிய படம் என்று சொல்ல வேண்டும். ரஜினியை வைத்து படம் எடுக்க வேண்டும் என ஆசை தான். ஆனால், கதை தான் நாயகனை தீர்மானிக்க வேண்டும். பாகுபலி வெற்றிக்கு காரணம், 'எமோஷன்' தான். ஆர்ஆர்ஆர் படத்தில் அந்த, 'எமோஷன்' அதிகம் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.