ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ஜெய்பீம் படம் கடும் சர்ச்சைகளை சந்தித்தது. அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சூர்யா. இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவுடன் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தை தொடர்ந்து பாலா, வெற்றிமாறன், சிவா என மூன்று இயக்குனர்களின் படங்களில் அடுத்தடுத்து நடிக்கப் போகிறார் சூர்யா.
இவற்றில் சூர்யா நடிப்பில் ஏற்கனவே நந்தா, பிதாமகன் படங்களை இயக்கி உள்ள பாலா சூர்யாவை வைத்து இயக்கும் புதிய படத்திற்கான கதை பணிகளில் ஏற்கனவே ஈடுபட்டிருப்பதால் கூடிய சீக்கிரமே படப்பிடிப்பை துவங்கி விடுவார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் அடுத்தபடியாக பாலா இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஓய்விற்காக குடும்பத்துடன் சூர்யா துபாய் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் அவர் துபாயில் இருந்து திரும்பியதும் பாலா இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.