இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! |
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். அப்பா சுரேஷ் குமார் தயாரிப்பாளர், அம்மா மேனகா நடிகை. கீர்த்தி சுரேஷை ஒருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டும் வீடியோ ஒன்று கேரளாவில் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த வீடியோ நடிகர் சங்கத் தலைவர் மோகன்லாலின் கவனத்துக்கு சென்றது. உடனடியாக அவர் அதை கீர்த்தியின் தந்தை சுரேசஷ் குமாருக்கு அனுப்பி, இதுகுறித்து போலீசில் புகார் அளிக்குமாறு தெரிவித்தார்.
இதை தொடர்ந்து அவர் திருவனந்தபுரம் டிஜிபி அவலுவலகத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமார் கூறியிருப்பதாவது: என் மகள் கீர்த்தி சுரேஷ் நடித்த மரைக்காயர் படத்தை தோல்வியடையச் செய்வதற்காக ஏராளமானோர் சமூக வலைத்தளங்களில் அந்த படம் குறித்து மோசமான கருத்துகளை பரப்பி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகத்தான் அந்த படத்தில் சிறப்பாக நடித்த என் மகள் கீர்த்தி சுரேஷ் குறித்து ஆபாசமாக திட்டி வீடியோ வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து நான் போலீசில் புகார் அளித்துள்ளேன். குற்றவாளியை விரைவில் கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்துள்ளனர். என்றார்.