நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சாஜித் நாடியத்வாலாவும், சல்மான்கானும் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளனர். தற்போது மீண்டும் இவர்கள் கூட்டணியில் ஒரு புதிய படம் உருவாகிறது. இந்தப்படத்தை பர்ஹாத் சம்ஜி என்பவர் இயக்கவுள்ளார். இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் இதில் இன்னொரு கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்பதுதான்.
வெங்கடேஷுக்கு பாலிவுட் ஒன்றும் புதிதல்ல. தொண்ணூறுகளில் சின்னத்தம்பியின் இந்தி ரீமேக்கில் நடித்து பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்தார் வெங்கடேஷ். அதன்பிறகு 1995ல் டக்தீர்வாலா என்கிற படத்தில் நடித்தவர், அந்த இரண்டு படங்களுடன் பாலிவுட்டில் இருந்து விடைபெற்றுக்கொண்டார். இந்தநிலையில் தான் 26 வருடங்கள் கழித்து மீண்டும் இந்தியில் நுழையா இருக்கிறார் வெங்கடேஷ்.
மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியுடன் இந்தப்படத்தை உருவாக்க இருப்பதாக கூறியுள்ளார் தயாரிப்பாளர் சாஜித் நாடியத்வாலா. அந்தவகையில் சல்மான்கானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. மேலும் வெங்கடேஷுக்கு ஜோடியாகவும் பிரபல தென்னிந்திய நடிகை ஒருவரையே நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.