'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால் - சாய் தன்ஷிகா இன்று நிச்சயதார்த்தம் | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான மாநாடு படம் வெற்றி பெற்றதை அடுத்து கவுதம்மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் நடந்து முடிந்ததை அடுத்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்கி விட்டது.
அடுத்ததாக கொரோனா குமார், பத்து தல ஆகிய படங்களில் நடித்து வரும் சிம்பு, புதிய படங்களில் நடிப்பது சம்பந்தமாக சில இயக்குனர்களிடம் கதை கேட்கத் தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில், டைரக்டர் ராம், நடிகர் சிம்புவிடம் ஒரு கதை சொல்லியிருப்பதாகவும், தற்போது கைவசமுள்ள படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் ராம் படத்தில் சிம்பு நடிப்பார் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தற்போது மலையாள நடிகர் நிவின்பாலி, அஞ்சலி நடிக்கும் படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்கி வரு கிறார் ராம். இந்த படத்தின் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் நடைபெற்று வருகிறது.