நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் |
மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன் வெளியான த்ரிஷ்யம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து இந்த வருடம் வெளியான த்ரிஷ்யம் 2 படத்தையும் கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையாமல் எடுத்து, அதையும் வெற்றி படமாக்கினார் ஜீத்து ஜோசப். தற்போது மோகன்லாலை வைத்து டுவல்த் மேன் என்கிற படத்தை இயக்கி வரும் ஜீத்து ஜோசப், த்ரிஷ்யம்-3 படத்தை உருவாக்குவதற்கு 50 - 50 சான்ஸ் தான் இருக்கிறது என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “த்ரிஷ்யம் படம் வெளியாகி வெற்றி பெற்ற பின்னர் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு கொஞ்சம் கூட ஏற்படவில்லை. பின்னர் ஒருகட்டத்தில் அதற்கான ஸ்கிரிப்ட் தயாரானதும் தான் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தோம். ஆனால் இப்போது நிலைமை வேறு. இரண்டாம் பாகத்தின் வெற்றியால், இதன் மூன்றாம் பாகத்தை எப்போது துவங்க போகிறீர்கள் என பலரும் கேட்கிறார்கள்.
சொல்லப்போனால் மூன்றாம் பாகத்திற்கான க்ளைமாக்ஸ் கூட நான் யோசித்து வைத்துவிட்டேன். அதை மோகன்லாலிடம் சொல்ல அவருக்கும் அது பிடித்துப்போய் விட்டது. ஆனால் க்ளைமாக்ஸ் வரை சரியான பாதையில் கதையை நகர்த்திக் கொண்டு வர காட்சிகள் வேண்டும் இல்லையா..? அதில் தான் சவால் இருக்கிறது. தற்போது அதற்கான ஸ்கிரிப்ட் வேலையிலும் இருக்கிறேன்..
அதேசமயம் மனதிற்கு திருப்தியான ஸ்கிரிப்ட் தயாரானால் தான் மூன்றாம் பாகத்திற்கு வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி மூன்றாம் பாகத்தை உருவாக்கியே தீர வேண்டும் என்பதற்காக எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டேன். பேசாமல் அந்த திட்டத்தை அப்படியே போட்டுவிடுவேன்.. அதனால் இப்போதைக்கு சொல்வதென்றால் த்ரிஷ்யம் 3 படத்தை உருவாக்குவதற்கு 50 - 50 சான்ஸ் தான் இருக்கிறது” என கூறியுள்ளார் ஜீத்து ஜோசப்.