'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சூர்யா மற்றும் பாண்டியராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் டப்பிங் பணிகள் தொடங்க உள்ளது. இன்று படத்தின் அப்டேட் வெளியாகும் என அறவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி படம் பிப்ரவரி 4ல் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் சிம்புவுக்கு பிப்ரவரி 3 பிறந்தநாள். அதற்கு மறுநாள் சூர்யா படம் வெளியாக உள்ளது.
முன்னதாக இந்த படத்தை பொங்கல் தினத்தில் வெளியிட எண்ணியிருந்தனர். ஆனால் அந்த சமயத்தில் வலிமை, ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம் போன்ற படங்கள் வெளியாக உள்ளதால் பிப்ரவரிக்கு இந்த படத்தை தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.